Hey, don't stop me!

Tuesday, August 10, 2010

வாழ்க்கை

இருட்டில் இருந்த குழந்தை
வெளிச்சத்திற்கு வந்தது.
கண் திறந்தது.
ஆனால் இருள் நீடித்தது!

கருங்காட்டில் மரங்கள் சொன்னது ரகசியம்!
நானும் சொன்னேன் ரகசியம்,
உன்னை நம்பி, என் நண்பி!

சுற்றாத இடத்தை சுற்றினோம்!
பேசாத பேச்சை பேசினோம்!
காதல் ஆனது கத்திரிக்காய்!
நாமும் பிரிந்து போனோம்.

கவலை கவலை!
காலை மாலை
வேலை இல்லை!

வீட்டிற்க்கு வெளியில் திண்ணையில்
சோகத்துடன் இருந்த தாத்தா,
வீட்டிற்குள் இருக்கிறார்;
போட்டோவில் சிரித்துக்கொண்டு!

சிலவற்றை சிறு பிள்ளைத்தனமாக உள்ளது என்று நீங்கள் நினைத்து இருந்தால் சரியே. "வாழ்க்கை" என்ற இந்த என் முதல் கவிதைத் தொகுப்பை 15-16 ஆவது வயதில் கிறுக்கியது. இதில் பல மறந்துவிட்டன...