"நமக்கு எல்லாம் எவனாவது வேலை போட்டு தருவானா?" என்று சோகமே உருவமாக உட்கார்ந்து கொண்டிருந்த சமயம் ஒரு அதிசயம் நடந்தது... எனக்கு வேலை கிடைத்தது! English alphabets-சை சொல்லச் சொன்னால் "a, b, d, e, f,... " என்று தான் சொல்லுவேன்; அந்த அளவுக்கு 'C'-யில் expert நான். அப்படி இருக்கும் போது software company-யில் வேலை கிடைத்தால் அது கடவுளின் திருவிளையாடல் என்று தானே கூற வேண்டும்?!
அதனால் வீட்டில், இதுவரை இல்லாத அளவுக்கு காலரை தூக்கிகொண்டு நடந்தேன். இனிமேல் காலேஜில் பட்ட கஷ்டம் எல்லாம் தீர்ந்தது என்று நினைத்தால் விதி வேறு உருவத்தில் விளையாடியது.
எப்போதும் நான் கல்லூரிக்கு அமைதியாக சென்றதை விட அதிரடியாக சென்றது தான் அதிகம். முன் தினம் இரவு சினிமா பார்த்து விட்டு அதிகாலையில் தூங்கி காலையில் எழுந்து, அவசர அவசரமாக இட்லி சாப்பிட்டு (அதில் ஒரு இட்லியை அம்மாவிற்கு தெரியாமல் தூக்கி எரிந்து விட்டு), bus stop-யிற்கு ஓடி வருவதற்குள் college bus கிளம்பிவிடும். ஆனாலும் நான் விடாமல் Spider Man alter ego (மறு உருவமான) Peter Parker போல் பாய்ந்து சென்று பஸ்ஸை பிடிப்பேன். சில சமயம் பஸ் போய் விடும்... நான் வேடிக்கை பார்த்துக்கொண்டே மெதுவாக town bus stop-யிற்கு நடந்து செல்வேன்.
பஸ் காலேஜ் போய் சேருவதற்குள், first period முடிந்திருக்கும். கடமையில் கண்ணியவான் போல் நான் இரண்டாவது period சென்று "எச்சூச் மீ சார்..." என்று நிற்பேன். வாத்தியார்களும், நான் நல்ல பையன் என்று நினைத்து விட்டு விடுவார்கள்.
இப்போது என்ன பிரச்சனை என்றால், இந்த சாப்ட்வேர் கம்பனிக்கும் அதே போல் பஸ் பிடிபதற்காக ஓடுகிறேன்! ஒரே வித்தியாசம் - இது town bus. இங்கு இரண்டு பஸ் மாறி வெயிலில் காய்ந்து வியர்வையில் குளித்துக் கொண்டு கம்பெனி பொய் சேர்ந்தால், அங்கு ஒரு நாள் முழுவதும் AC-யில் நடுங்க வேண்டும். :(
என் batch-ல் college classmates ஆன இரண்டு நண்பர்களும் (வேற வழி, விரோதிகள்-னா சொல்றது?) இருக்கிறார்கள்.
சேர்ந்த புதிதில் batch-ஐ பிரித்து எங்களை தனியாக உட்கார வைத்தார்கள். உடனே அந்த இரண்டு பெரும் கண்ணை அங்கும் இங்குமாக உருட்டி "இது உனக்கு. இது எனக்கு." என்று பெண்களை select செய்தார்கள். அத்தோடு நிற்க்காமல், காலேஜில் பெண்களிடம், தன் பால் வடியும் முகத்தை காட்டி 'நல்ல பையன்' சர்டிபிகேட் வாங்கினவன், சிவனே என்று இருந்த என்னிடம் ஒரு சப்ப பிகரை காண்பித்து "அத எடுத்துக்கோ டா" என்று ஏதோ மளிகைக் கடை சாமான் எடுப்பது போல் கூறினான். நான் slow motion-ல் திரும்பி முறைத்தால், "நம்ம ரேஞ்சுக்கு அது தான் டா கரெக்டா இருக்கும்" என்று அறிவுரை வழங்கினார்! பின் "நீ இப்படி இருந்தென்ன உனக்கு எந்த பொண்ணும் கிடைக்க மாட்ட" என்று வேறு சாபமிட்டார்! :(
இந்த கம்பெனி training period-ல் technical session மற்றும் soft skills session நடக்கும். காலையில் technical session வைத்து மொக்கை போடுவார்கள் என்றால், சாப்பாட்டு நேரத்தில் சாப்ட்டு ஸ்கில் வைத்து சாகடிப்பார்கள். ஆனாலும் எங்கள் trainer, ரொம்ப interesting ஆன சிறு பிள்ளை விளையாட்டுகளை வைத்து எங்களை பட்டினியால் சாகவிடாமல் பார்த்துக்கொள்வார். அதாவது, விளையாட்டை case study ஆக வைத்து அதில் இருந்து moral story சொல்வார்.
இப்படி ஒரு நாள் 'மத்தவன் பலூனை வெடிக்கும்' போட்டி நடத்தினார். ஒவ்வொருவருக்கும் ஒரு பலூனும் ஒரு பல் குத்தும் குச்சியையும் தந்தார். பலூனை யார் கடைசி வரை பாதுகாக்கிறார்களோ அவர்களே winner என்றார். எல்லோரும் பலூனை எடுத்துக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடினார்கள். நான் மட்டும் சுற்றும் முற்றும் யாரும் கவனிக்காததை பார்த்து நைசாக CPU பின்புறம் என் பலூனை ஒளித்துவிட்டு மத்தவன் பலூனை வெடித்துகொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து யாராவது பலூன் வைத்துக்கொண்டிருகிறார்களா எனக் கேட்டார். எல்லாரும் வெடித்து முடித்ததை பார்த்து, நான் ஒளித்து வைத்த பலூனை எடுத்துக்கொண்டு hero போல் முன்னே செல்லும் போது எங்கிருந்தோ ஒருவன் குடுகுடு என்று ஓடி வந்து என் பலூனை வெடித்து விட்டான். கோவத்தில் குச்சியை அவன் மூஞ்சியில் வீசி விட்டு உர்ர்ர்ர்ர்ர்... என வந்து உட்கார்ந்து கொண்டேன்.
இன்னொரு நாள் எல்லோரும் மற்றவர் கையை பிடித்துக்கொண்டு வட்டமிட்டு நிற்க வேண்டும் என்றார். பின் கை எடுக்காமல் எதிர்புறம் நிற்கவேண்டும் என puzzle போட்டார். சொன்னது தான் தாமதம், உடனே போலீஸ்காரன் போல் தோற்றமளித்து பயந்தாங்கோலி போல் திருட்டு-முழி முழிக்கும் என் மற்றொரு நண்பன்(?) நான் எச்சரித்தும் கேட்காமல் ஓடி போய் ஒரு பெண் கையை பிடித்துக்கொண்டான். அப்புறம் எல்லோரும் மண்டை பிய்த்துக்கொண்டு கையை காலை ஆட்டுவதும், உடம்பை நெளிப்பதும், குட்டிக்கரணம் போடுவதுமாக காமெடி பண்ணிக்கொண்டிருந்தார்கள். நான் திடீரென்று என் தலையில் பல்பு எரிகின்றது என்றேன். எல்லோரும் ஆச்சிரியமாக என்னையே பார்த்தார்கள். அப்புறம் என் idea படி எல்லோரையும் நான் 'Ringa-Ringa Roses' அட வைத்தேன். பின் ஆடி முடித்து சாதிச்ச சந்தோஷத்தில் trainer-ஐ பார்த்தல், "இது செல்லாது செல்லாது" என சிம்பிளாக சொல்லிவிட்டார்.
இன்னும் பற்பல திருவிளையாடல்கள் தொடரும்...